Wednesday, August 22, 2012

பலமுறை விழுகிறேன் உன்காதலில்

கனவிலும் நினைக்கவில்லை...
இது என்ன புதிதாய்?....
அதே குருக்குறுப்புகள்
அதே மயக்கங்கள்
பரித்தவிப்புகள், பகல் கனவுகள்..
மனதில் ஒரு மிதப்பு, நடையில் புது துடிப்பு
நண்பர்களின் அரட்டைகளில் அதிகமாய் சத்தமிட்டு..
அனைவருக்கும் புன்னகைத்து
நலம் விசாரிப்புகள்.

எதிர்பார்ப்புகளுடன் காலைகள்
தவிப்புகளுடன் மாலை பிரிவுகள்..
இடைப்பட்ட நேரம்
நம்மக்கு மட்டும் கணங்களாய்
உனக்கும் எனக்கும் யுகங்களாய்
உனது அறையை நோக்கியே எதேச்சையாய் பார்வைகள்

உனது நான்கு சக்கர வாகனம்
எனக்கு கோவில் நந்தியாய் 
நீ வந்திருக்கிறாய் என்பதை வாசலிலேயே அறிய

தேநீர் அருந்துகையில் உன்னையும்
சிறிது பருகுகிறேன்
என்றுமே நான் மட்டும் கடைக்காரனை குறை கூறியதில்லை..
வழியில் உன்னை கடக்காயில்
உறைந்துவிடுகின்றன அந்த நொடிகள்
எனது வழி மறந்து நான்...

உன்னுடன் நடக்கையில்
ஆயிரம் பேர்களுடன் நடக்கும் தெம்பு
கூட்டங்களில் நீ மட்டுமே எனது தேடல்
நீ இருக்கும் திசையே எனது பார்வையாளர் பகுதி

யாருக்கும் தெரியாமல் நம்
பார்வை பரிமற்றங்கள்...
நம்மோடு மட்டும் இளையராஜா,ஷேக்ஸ்பியர் ,கலீல் கிப்ரான்!
Paulo  coelho , Cameroon Diaz -உம், Clint Eastwood -உம்!
தொடும் தூரத்தில் இருந்தும் நம்மிடையில் தோலைதூரங்கள்!
எல்லோரும் எளிதாய் சேர்ந்து செல்கையில்
நமக்கு அது முடிவதில்லை
நாம் சேர்ந்து நடக்கையில் அங்கு ஒரு திருவிழா!
Oxygen  சுவாசித்து நம்மையும் அறியாமல்
காதலை  வெளியெற்றுகிறோமோ?

அத்தனை கண்களிலும் ஆச்சரியங்கள்..
சில பொறாமைகள்...சில பெருமூச்சிகள்!
நான் பெருமைப்பபட்டுக்கொள்ளும் தருணங்கள் அவை..

மளிகை சாமான் பட்டியல் கொடுத்தாலும் சிரத்தையோடு செய்கிறேன்
கணினியில் “ஆன்லைன் -ல் ” நீ!

வீட்டில் மின்சாரம் இல்லாத இரவுகள்
நீலாவை கெஞ்சவைக்கிறேன் போதுமென்று..
அவ்வளவு தூதுகள்!

மனைவி எது சொன்னாலும் சலித்துகொள்வதில்லை இப்போதெல்லாம்..
குழந்தைகள் கூச்சலித்தாலும் கொஞ்ச முடிகிறது..
யார் சொன்னது ஒருமுறை வருவது காதாலென்திறு
ஒருமுறை அல்ல வரைமுரையும் 
அறியாதது இந்த காதல்!
சில சொல்லியும், பல சொல்லாமலும்,
சில தெரிந்தும், சில தெரியாமலும்
 

No comments:

Post a Comment