Friday, December 17, 2010

வாழ்கிறேன் நடைப்பிணமாய்!!!!

வாழ்கிறேன் நடைப்பிணமாய்.
போலியான புன்னகை…
நட்புகென பொய் சிரிப்பு
நிஜங்களை கடந்த நடிப்பு..
இயந்திரமயமாக்கப்பட்ட வாழ்வில் …
நானும் ஒரு இயந்திரமாய்…
என்னை நானே இயக்கிக்கொள்கிறேன்!!!!!
முகத்திக்கு மட்டுமில்லாமல்….
என் மனத்திற்கும் சாயம் பூசிக்கொள்கிறேன்.
என்னுள் இருந்த மழலை அழிந்து…
என்னை தேடும் இக்கண்ணீர் மழை!
என் விருப்பு, வெறுப்பு, கோபம், பாசம்,
அனைத்தையும் சேர்த்து
இயந்திரத்துடன் நடந்த போரில்
எனக்கென கிட்டிய விடை
"UNEXPECTED ERROR OCCURED"!!!!
நிறைந்திருந்த என் வாழ்வில்
ஓஸோன் படலத்தை போன்று
எங்கும் ஓட்டையாயை…
வெறுமையே நிறைந்திருக்கிறது!!!
வாழ்கிறேன் நடைப்பிணமாய்!!!!!!!!!: